முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு பணம் தரவில்லை என்று ஊடகவியலாளர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறையிட்டுள்ளார்.
சுனில் ஜயசேகர எனும் சிங்கள ஊடகவியலாளர் ஒருவரே இவ்வாறு முறையிட்டுள்ளார்.
இவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் லேக் ஹவுஸ் நிறுவன ஆங்கில ஊடகவியலாளராகக் கடமையாற்றியிருந்தார்.
இந்நிலையில் கடந்த தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் சுமார் 150 கோடி ரூபாவை பல்வேறு நபர்களுக்கு பகிர்ந்து கொடுத்திருப்பதாக ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ஊடகவியலாளர் சுனில் ஜயசேகரவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் மஹிந்த தரப்பினர் தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து சுனில் ஜயசேகர மறுத்துள்ளார். அத்துடன் இது குறித்து விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறியுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவின் உதவியுடன் அவர் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.