மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைக்க தயார் – மஹிந்தராஜபக்ஷ

335

ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து பழைய முறைமையிலேனும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைக்க தயாராவுள்ளதாக எதிர் கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த அதன் தமது பிரதான குறிக்கோள் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்துவது எனத் தெரிவித்தது. தற்போது ஆட்சிக்கு வந்ததன் பின்னர்  நல்லாட்சி அரசாங்கமே தேர்தலை காலம் தாழ்த்தி மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதோடு, மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றாது அவர்களை ஏமாற்றி வருவதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ  இல்லத்தில் சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

SHARE