நோவஸ்கோஷியாவில் எதிர்வரும் 30ஆம் திகதி மாகாணத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப நோவஸ்கோஷிய தேர்தல் சட்டங்களின் பிரகாரம் குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் நடைபெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நேற்றைய தினமே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணத்தின் முக்கிய மூன்று கட்சிகளும் நேற்றைய தினமே தேர்தல் பிரசார பேரணிகளை ஆரம்பித்துள்ளன.
லிபரல் அரசின் வரவு செலவுத்திட்ட அறிப்புக்கள் வெளியாகிய மூன்று தினங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லிபரல் அரசின் வரவு செலவுத்திட்ட அறிவிப்புக்களில், ஒருவரின் அடிப்படை வருமான அளவு அதிகரிப்பு, 13 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக மருத்துவமனை வசதிகள், கிராமப்புறங்களில் அதிவேக இணைய சேவையை மேம்படுத்துவதற்கு 14.5 மில்லியன் டொலர்கள் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.