மாகாண பாடசாலைகளுக்கு 5000 கணித, விஞ்ஞான, ஆங்கில, கணனி துறைசார்ந்த ஆசிரியர்களை நியமிக்க பிரதமர் அனுமதி ‘ –  வே. இராதாகிருஸ்ணன்

270

நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கிகிலியம்மான மகா வித்தியாலயம் மாணவ தலைவர்களுக்கான சின்னம் அணிவித்தலும் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ அமைக்கபட்ட பாடசாலைக்கான நீர் விநியோக திட்டத்தை பாடசாலை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பாடசாலை அதிபர், நுவரெலியா கல்வி வலயத்தின் கல்வி அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள். இதன்போது கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் மாகாண பாடசாலைகளுக்கு 5000 கணித, விஞ்ஞான, ஆங்கில, கணனி துறை சார்ந்த ஆசிரியர்களை நியமிக்க மாகாணங்களுக்கு பிரதமர் பணிப்புரையும் அனுமதியும் வழங்கி உள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் மாகாண பாடசாலைகளில் குறைபாடாக இருக்கும் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என எதிர் பார்க்கபடுகின்றது.

தொடர்ந்து இங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் அவர்கள் பாடசாலை வளர்ச்சி என்பது பாடசாலையில் மாணவர்களின் ஒழுக்கம், பெறுபேறு, பாடசாலையின் சூழல், இணைப் பாடவிதான செயற்பாடுகளின் பெறுபேறுகள், விழாக்களின் ஒருங்கிணைப்பு போன்றவற்றில் ஒரு பாடசாலையில் அபிவிருத்தியை இனங்காணலாம். இவ்வாறான பாடசாலைகளுக்கு பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதற்கு முயற்சிக்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு பாடசாலைகளிலும் உள்வாங்கும் போது பாடசாலையின் வளர்ச்சி அதிகரிக்கின்றது. அவ்வாறான பாடசாலைகளுக்கு நாங்கள் உதவுவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் தயாராக இருக்கின்றோம். பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்களின் நேரடி கண்காணிப்பில் கீழ் கல்வி அமைச்சு இயங்கி வருகினறது. நாட்டில் கல்வி அபிவிருத்திக்காக வரலாற்றில் முதல் தடவையாக கல்வி வளர்ச்சிக்கான பாதையில் பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது. இதன்மூலம் கல்விசார் அனைத்து செயற்பாடுகளம் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. அதேபோல் மாணவர்களுக்கு அனைத்து வசதிகள் வழங்கல், ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி, அதிபர் ஆசிரியர் பயிற்சி, புதிய ஆசிரியர் நியமனம், பாடசாலை வள குறைபாடுகள் அபிவிருத்தி போன்ற செயற்பாடுகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது பாடசாலையில் கல்வி கற்கம் மாணவர்கள் கட்டாயம் 17 வருடங்கள் கல்வி கற்க வேண்டும். பாடசாலை கல்வி முடிந்ததும் பெறுபேறுகளை மாத்திரம் கையில் எடுத்துச் செல்லாமல் எதிர்காலத்தில் தொழில் வாய்ப்பு சம்பந்தமான தொழில் பயிற்சிகளையும் பெற்றுச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாடசாலைகளில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் ஒரு தொழில் பயிற்சியை பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு பயிற்சி பெற்று செல்லும் மாணவன் வேலையில்லா திண்டாட்டத்திற்கு உள்ளாக மாட்டான் இனிமேல் வேலையின்மை பிரச்சினைகளை குறைக்கலாம் என்று கூறினார்.

e8a18e1c-205f-42c9-9dd0-dddc05ab65c2

SHARE