மாகாண ரீதியில் முதல் இடம் பெற்ற பேசாலை புனித பத்திமா ம.ம.வித்தியாலய பாடசாலை  மாணவர்கள் கௌரவிப்பு-

170
கடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வந்த பெரு விளையாட்டு மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளில் வடமாகாண ரீதியில் முதல் இடத்தை மன்னார் கல்வி வலயம் பெற்றுள்ளது.
குறித்த போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்த மன்னார் பேசாலை புனித பத்திமா மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (14) சனிக்கிழமை பாடசாலையில் இடம் பெற்றுள்ளது.
மன்னார் பேசாலை புனித பத்திமா மத்திய மகா வித்தியாலய உயர்தர மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வும்,ஞாபகர்த்த நினைவுச் சின்னம் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை பாடசாலையின் அதிபர் தலைமையில்   இடம் பெற்றது.
இதன் போது வடமாகாண ரீதியில் இடம் பெற்ற குறித்த போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE