மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த 4 வயது சிறுவன்: பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!

209

கனடா நாட்டில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக பொதுமக்களுக்கு மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வான்கூவர் நகரில் உள்ள Langley என்ற பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் 4 வயதுள்ள சிறுவன் ஒருவன் வசித்து வந்துள்ளான்.

கடந்த வியாழக்கிழமை பிற்பகல் வேளையில், வீட்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு இருந்தபோது கால் தவறி கீழே விழுந்துள்ளான்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல மருத்துவரான லிசா ரோமன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வெளி உலகை பார்க்க ஆவலாக இருக்கும்.

இதனால் அடிக்கடி ஜன்னல் வழியாக வெளியே என்ன நடக்கிறது என வேடிக்கை பார்க்க முயற்சி செய்வார்கள்.

ஜன்னலில் உயரம் அதிகமாக இருந்தாலும், கூட ஏதாவது ஒரு பொருளை இழுத்து வைத்து அதன் மீது ஏறி நின்று ஜன்னல் வழியாக வெளியே பார்ப்பார்கள்.

இவ்வாறு பார்க்கும்போது கால் தவறி கீழே விழுந்தால், தலை தான் அதிகளவில் பாதிக்கும். ஏனெனில், குழந்தைகளின் உடல் உறுப்புகளில் தலை தான் அதிக எடையுள்ளது.

வீட்டிற்குள் பூச்சிகள் நுழையாமல் இருப்பதற்கு தான் ஜன்னல் மறைப்பு துணிகள் போடுகிறோம்.

எனவே, ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களது வீட்டு ஜன்னலை பாதுகாப்பான நிலையில் வைத்திருக்க வேண்டும். அதாவது, சுமார் 10 செ.மீ அகலத்திற்கு மட்டும் தான் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்திருக்காமல் கொக்கிகளை சரியாக பூட்டியிருக்க வேண்டும்.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் குழந்தைகளை தனியாக பால்கனிக்கு அல்லது மேல் மாடிகளுக்கு அனுப்பக்கூடாது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)

SHARE