மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநகர் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று (13-12-2018)மாலை இடம்பெற்றுள்ளது.
பசு மாடு ஒன்றினை திருட்டுத்தனமாக வீடொன்றில் வைத்து இறைச்சியாக்கியபோது பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார் தேடுதல் மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த மாட்டிலிருந்து பெறப்பட்ட இறைச்சியையும், எச்சங்களும் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்து இருவர் கைது செய்யப்பட்டதாகவும், பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு பொது மக்களின் மாடுகள் கடத்தப்படுவதும், சட்டவிரோதமான முறையில் இறைச்சிகளாக்கப்படுவதும் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.