மாட்டிறைச்சி சாப்பிடுவது நல்லதா? ஆபத்தா?

194

மாட்டிறைச்சியில் மயோகுளோபின் என்ற புரோட்டீன்கள் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.

இதனால் கோழி மற்றும் பன்றி இறைச்சியை விட மாட்டிறைச்சி மட்டும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.

எனவே இந்த மாட்டிறைச்சியை சிவப்புக் கறி என்று அழைக்கப்படுகிறது.

மாட்டிறைச்சியில் கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை அதிகமாக உள்ளது.

மனிதர்களின் ஆயுட்காலம் மற்றும் அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்களை வைத்து ஹார்வார்டு பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வின் முடிவில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களில் 20 சதவீதம் பேர்கள் இளம் வயதிலேயே மரணம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்கள்.மேலும் மாட்டிறைச்சி சாப்பிடுவதால், இதயநோய் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட காரணமாக இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மாட்டிறைச்சிகள் சாப்பிடுவதால் மரணம் போன்ற ஆபத்துகள் ஏற்படுகிறது.

எனவே மாட்டிறைச்சியை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE