மாணவர்களுக்கு வந்தது அதிஸ்ரம்!க.பொ.த. உயர் தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் ஏப்ரல் மாதத்தில்.

177

க.பொ.த. உயர் தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் ஏப்ரல் மாதத்தில் நடாத்துவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் பரீட்சையை நடாத்தினால், ஜனவரி மாதத்தில் புதிய மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்க முடியுமாகின்றது.

தற்பொழுது நடைபெறும் முறையில் ஆகஸ்ட் மாதம் பரீட்சை நடைபெற்றால், பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் ஒரு வருடமும் எட்டு மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் இப்பரீட்சையை நடாத்தினால், இந்த கால இடைவெளியை ஒரு வருடத்தால் குறைக்க முடியும். இந்த கால இடைவெளி அதிகரித்திருப்பதனால், தனியார் நிறுவனங்களை நோக்கி மாணவர்கள் செல்லும் வீதம் அதிகரித்து வருகின்றது.

இதனைத் தடுத்து, மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்குள் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். இதற்கான நடவடிக்கை குறித்து கல்வி அமைச்சு கலந்துரையாடி வருவதாகவும் கிரேரு மேலும் குறிப்பிட்டுள்ளார்.A-L

SHARE