மாணவர்கள் கொலை – விசாரணை பற்றிய தகவல்களை வெளியிடத் தடை

203

ssp-ajith-rohana-police-media-spokesman-450x300

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணை பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என அதிகாரிகளுக்கு காவல்துறை கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை கொக்குவிலில் பகுதியில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் மற்றும் அதனையடுத்து இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

பல குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த விசாரணைகள் தொடர்பான எந்த தகவல்களையும் ஊடகங்களுக்குப் பகிர வேண்டாம் என்று பொலிஸ் திணைக்களம், பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண இந்த தகவலை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

SHARE