மாணவியுடன் குடும்பம் நடத்திய வான் சாரதி கைது

287

Evening-Tamil-News-Paper_7254755497

15 வயதான பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக குடும்பம் நடத்திய 38 வயதுடைய நபர் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் சிலாபம் – கரவிட்டாகரய பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமானவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் பாடசாலை வேனின் சாரதி என்றும், அவரின் வானில் குறித்த மாணவி பாடசாலை சென்று வந்த போது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த விடயம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து மாணவியை குறித்த நபரின் வானில் அனுப்புவதை நிறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து கடந்த 24ம் திகதி குறித்த மாணவியை சந்தேகநபர் கடத்திச் சென்றுள்ளதாக குறிப்பிட்டு மாணவியின் பெற்றோர் மாதம்பே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதற்கமைய பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், மாணவியை சிலாபம் வைத்தியசாலையில் பரிசோதனைகளுக்காக அனுமதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

SHARE