மாணவியை உயிருடன் எரித்து கொன்ற சக மாணவர்கள்: பகீர் காரணம்

152

 

சமூக ஊடகத்தில் மத நிந்தை கருத்துகளை பகிர்ந்ததாக கூறி மாணவி ஒருவரை சக மாணவர்கள் அடித்து துன்புறுத்தி எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் சோகோடோ மாகாணத்திலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. முஹம்மது நபி தொடர்பில் மத நிந்தை கருத்துகளை தமது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து வந்துள்ளார் டெபோரா சாமுவேல் என்ற மாணவி.

இஸ்லாம் தொடர்பில் சக மாணவர்கள் வெளியிடும் கருத்துகளால் கோபமடைந்த அவர், எதிர் கருத்துகளை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சக மாணவர்கள், டெபோராவை கொடூரமாக தாக்கியதுடன், கல்லூரி நிர்வாகம் அவரை பாதுகாக்க முயன்றும் இறுதியில் மாணவர் கும்பல் அவரை மீட்டு கல்லால் தாக்கியுள்ளது.

பின்னர் அவர் சாகும் மட்டும் தாக்கியுள்ளனர். தொடர்ந்து கட்டிடத்திற்கும் நெருப்பு வைத்துள்ளனர். இதில் அவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் இரு மாணவர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE