குறித்த வயோதிபருக்கு நேற்று முன்தினம் 15 ஆண்டுகள் கடூழியச் சிறையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 லட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் திகதி இந்த வல்லுறவு சம்பவம் நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் 14 வயது பாடசாலை மாணவியாக இருந்தார். அவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய எதிரி 62 வயதுடைய வயோதிபராக இருந்தார்.
இதில் 16வயதுக்குக் குறைந்த பாடசாலை மாணவியைக் கடத்தியமை, அவருடன் பாலியல் வல்லுறவு கொண்டமை என்ற இரண்டு குற்றச்சாட்டுக்கள் வயோதிபருக்கு எதிராக சட்டமா அதிபரினால் சுமத்தப்பட்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், வழக்குத் தொடுனர் தரப்பில் பெண் அரச சட்டத்தரணி சுகந்தி கந்தசாமி சாட்சிகளை நெறிப்படுத்தினார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பிறந்த குழந்தையாகிய ஹம்சிகாவின் விஞ்ஞான ரீதியான தாய் பாதிக்கப்பட்ட பெண் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது டி.என்.ஏ ஆய்வின் மூலம் 99.99 வீதம் தந்தை எதிரியான கந்தையா சித்திவிநாயகம் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு எதிரியாகிய சித்திவிநாயகமே தந்தையாவார் என தனது சாட்சியத்தில் உறுதிப்படுத்தினார்.
இதேவேளை கடந்த புதன்கிழமை எதிரியின் உடல் நிலை குறித்து நீதிமன்றத்தில் தோன்றி சாட்சியமளித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், எதிரி இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு சில மணி நேரங்களில் கூட மரணம் ஏற்படலாம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.