மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய மாணவன் செய்த அசிங்கமான காரியம்

216

உயர்தர வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, அந்த காட்சிகளை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படும் உயர் தர வகுப்பு மாணவனை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான மாணவன், மாணவியை காதலித்து வந்ததுடன் அவரை உணவட்டுன ரூமஸ்வல பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதுடன், அந்த காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர் அந்த காட்சிகளை இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த காட்சிகளை பார்த்த மாணவியின் உறவினர் ஒருவர், மாணவியின் தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் மாணவனை கைது செய்துள்ளனர்.

SHARE