மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடியமாவாசை தீர்த்தோற்சவம்!!
மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஈழத்தின் கிழக்கே வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ஒன்றானமூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடியமாவாசை தீர்த்தம் இன்று செவ்வாய் கிழமை நண்பகல் 12 மணிக்கு இடம்பெற்றது.
இராமனால் வழிபட்ட ஆலயமாகவும் இராவணனால் வழிபடப்பட்ட ஆலயமாகவும் நீண்டகால வரலாற்றினைக்கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலய ம் திகழ்கின்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா சத்தத்துடன் வெளிவீதியுலா வந்த சுவாமி- தீர்த்தக்குளத்தையடைந்து ஆடியமாவாசை தீர்த்தம் ஆடியதுடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் பிதிர் கடன் தீர்த்து தீர்த்தமாடி தங்களது இறந்த மூதாதையர், பெற்றார்களுக்கு பிதிர் கடமைகளை நிறைவேற்றினர்.
சுவாமி வெளிவீதியுலா வந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தீர்த்தமாடுவதையும் படங்களில் காணலாம்



