மாமியாரை பார்க்கவே கோத்தா அமெரிக்கா சென்றார்

265

kottapayalankann1

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க விஜயம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன் பின்னணியில் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

எனினும் அவருடைய மனைவியின் தாயாரின் உடல் நலம் தொடர்பில் பார்ப்பதற்காகவே அவர் அமெரிக்காவுக்கு விஜயம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை போர்க்குற்றம் தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்கா வீசா வழங்காத போது கோத்தபாயவுக்கு மாத்திரம் வீசா வழங்கியமை எவ்வாறு என்று பொன்சேகாவின் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனினும் கோத்தபாய அமெரிக்க பிரஜை என்ற வகையில் அவருக்கு வீசா வழங்கப்பட்டதாக நியாயம் கூறப்பட்டுள்ளதாக இணையம் ஒன்று கூறுகிறது.

SHARE