மாம்பழத்தின் மாயாஜால மருத்துவங்கள்

522

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழங்களின் அரசன் என்று அழைப்பார்கள். இதனுடைய சுவையோ மிகவும் அற்புதமான இனிப்புச் சுவையைக் கொண்டது.

நீர்ச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள், கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், விட்டமின் C போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

  • மாம்பழத்தை சாப்பிட்டு அதன் பின் உடனே பால் குடித்து வந்தால், உடல் பலமடைவதுடன் செரிமான சக்தியும் அதிகரிக்கும்.
  • மாம்பழத்தில் இரும்புச்சத்து உள்ளதால் இது ரத்தசோகையை குணப்படுத்துகிறது. மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.
  • மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி வரட்சியான சருமங்களில் வைத்து, 10 நிமிடத்திற்கு பின் கழுவி வந்தால், சருமம் மென்மையாகும்.
  • மாம்பழத்தை பாலில் கலந்து, இரவு உணவுக்கு பின் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு சீராக இருக்கும்.

  • மாம்பழத்தில் விட்டமின் E இருப்பதால், செக்ஸ் ஹார்மோன்களை சீராக வைத்து, பாலியல் உணர்வினை தூண்டி, தாம்பத்திய உறவை நீட்டிக்கச் செய்கிறது.
  • குளுடாமின் என்னும் அமிலம் மாம்பழத்தில் இருப்பதால், மாம்பழத்தை தினமும் உணவுக்கு பதிலாக சாப்பிட்டு வந்தால், கவனம் செலுத்துவதற்கும், ஞாபக சக்தியை தூண்டவும் உதவியாக உள்ளது.
  • மாம்பழத்தினை சாறு எடுத்து குடித்து வந்தால், பல்வலி, ஈறுவலி மற்றும் நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்துகிறது.
  • மாம்பழத்தில் ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் அதிகமாக உள்ளதால், இவை புற்றுநோய்கள் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
குறிப்பு

மாம்பழத்தை வெறும் வயிற்றிலும், உணவோடும் சேர்த்து சாப்பிடக் கூடாது, உணவு சாப்பிட்ட பின் 20 நிமிடம் கழித்து மாம்பழத்தை சாப்பிட வேண்டும்.

SHARE