2014ல் காணாமல் போன மலேசியா விமானம் எங்குள்ளது என ரஷ்யாவின் ஜனாதிபதி புடினுக்கு தெரியும் என புலனாய்வு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மலேசியா MH370 ரக விமானம் கடந்த 2014ல் 239 பயணிகளை ஏற்றி கொண்டு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்குக்கு சென்று கொண்டிருந்த போது திடீரென மாயமானது.
அதன் பின்னர் கடந்த மூன்று வருடங்களாக அவுஸ்ரேலியா, சீனா, மலேசியா போன்ற நாடுகள் எவ்வளவு தேடியும் காணாமல் போன விமானம் குறித்து இந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனிடையில், புலானாய்வு அதிகாரியும், Unicorn Aerospace என்னும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான Andre Milne இது குறித்து கூறுகையில், விமானம் எந்த நேரத்தில் மற்றும் எந்த இடத்தில் காணாமல் போனது என்பது புடினுக்கு தெரியும்.
வங்காள விரிகுடாவில், இந்திய பெருங்கடலின் வடகிழக்கு பகுதியில் மலேசியா விமானம் மோதியிருக்க கூடும் என கூறியுள்ள Milne, அது எங்கு சரியாக தரையிரங்கியது என ரஷ்யா தனது செயற்கை கோள்களில் பதிவு செய்துள்ளது என கூறியுள்ளார்.
ரஷ்யா, தனது ரகசிய செயற்கைகோள் மூலம் இதை கண்டுபிடித்துள்ளதால் தான் இது தொடர்பான உண்மையை வெளியில் சொல்ல மறுக்கிறது.
தான், மற்றவர்களின் ரகசியங்களை உளவு பார்த்தது தெரிந்து விடும் என தான் ரஷ்ய ஜனாதிபதி புடின் இது குறித்து பேச மறுப்பதாக Milne கூறியுள்ளார்.
அந்த செயற்கை கோள்களை வைத்து வங்காள விரிகுடாவில் தேடினால் விமானம் பற்றி தெரியவரும் என Milne கூறியுள்ளார்.