
2012ம் ஆண்டு முதல் காணாமல் போன பொலிஸ் கொன்ஸ்டபிள் எழுதிய இறுதிக்கடிதம் கிடைத்துள்ளது. இந்த கடிதத்தின் மூலம், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென்ற வலுவான ஐயம் ஏற்பட்டுள்ளது.
ஒஹியா வனப்பகுதியில் சில தினங்களின் முன்னர் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. ரோந்து சென்ற வனபரிபாலன அதிகாரிகள் எச்சங்களை கண்டு, பொலிசாரிற்கு அறிவித்திருந்தனர். பொலிசார் நடத்திய சோதனையில், அந்த மனித எச்சங்கள் காணாமல் போன பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரது என்பது தெரிய வந்தது.
வவுனியா- செட்டிக்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தநிலையில் இவர் காணாமல் போயிருந்தார்.
இவரது எச்சத்திற்கு அருகில் பையொன்று கண்டெடுக்கப்பட்டது, அதில் காவல்த்துறை அடையாளஅட்டை, பற்தூரிகை, ஆடைகள் என்பன கண்டெடுக்கப்பட்டன. அத்துடன், உயிரிழந்தவர் இறுதியாக எழுதியதென சந்தேகிக்கப்படும் கடிதமொன்றும் கிடைத்துள்ளது.
தனது உடலை கண்டெடுப்பவர்கள் அது பற்றி பொலிசாரிற்கு அறிவிக்கும்படியும், தனது கையடக்கத் தொலைபேசியை தனது மூத்தமகளிற்கு வழங்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவற்றினடிப்படையில், இதுவொரு தற்கொலையான இருக்கலாமென பொலிசார் கருதுகின்றனர்.