மாயமான விமானியால் பரபரப்பு

206

கனடாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் அதன் விமானியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் அமைந்துள்ள விமான நிலையத்தில் இருந்து கடந்த புதன்கிழமை புறப்பட்டுச் சென்ற விமானமானது 285 மைல்கள் தாண்டி கனடாவின் Ontario பகுதியில் விபத்துக்குள்ளான நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகளுக்கு இதுவரை குறித்த விமானியின் உடலையோ அவர் தப்பிச்சென்றதற்கான தடயத்தையோ சுட்டிக்காட்ட முடியவில்லை என கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான பகுதியில் பனியால் மூடப்பட்ட நிலையில் விமானத்தின் பாகங்கள் விசாரணை அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விபத்து நேர்ந்த நேரம் குறித்த விமானி தப்பியுள்ளார் என்றால் அது எப்படி என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது என விசாரணை அதிகாரி Peter Rowntree தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி குறித்த விமானத்தில் பாரசூட் பயன்படுத்துவதற்கான வசதிகள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மிச்சிகன் பல்கலையில் பயின்ற சீனா குடிமகன் குறித்த விபத்தில் சிக்கிய விமானி என்ற தகவல் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. அவர் பெயர் மற்றும் ஏனைய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும் Harbor Springs பகுதிக்கு சென்றுகொண்டிருந்த அவர் autopilot வசதியை பயன்படுத்தியிருக்க வாய்ப்புகள் அதிகம் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் குறித்த விமானி தற்கொலை செய்துகொண்டார் என்ற குற்றச்சாட்டை விசாரணை அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துள்ளனர்.

 

மேலு

SHARE