மாயா – விமர்சனம்

307

நடிகர்கள்: நயன்தாரா, ஆரி, மைம் கோபி, ரோபோ சங்கர், லட்சுமி பிரியா, ரேஷ்மி மேனன் ஒளிப்பதிவு: சத்யன் சூரியன் இசை: ரான் ஏதன் யோஹன் தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன் இயக்கம்: அஸ்வின் சரவணன் பேய்ப் படங்களில் சற்று வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார்கள் மாயாவில். ஆனால் அதற்காக நயன்தாராவை கோரமாகக் காட்டி ரசிகர்கள் மனசை ‘நோகடிக்காமல்’ துடைத்து வைத்த குத்துவிளக்கு மாதிரி காட்டி ஆறுதல் தருகிறார்கள். வித்தியாசமான கதைதான். நயன்தாராவும் அவர் கணவரும் நடிகர்கள். இருவருக்கும் ஒரு கட்டத்தில் கருத்து வேற்றுமை வர, கைக்குழந்தையுடன் போய் தோழியின் வீட்டில் தங்கிக் கொள்கிறார் நயன்தாரா. தோழி வீட்டில் அவ்வப்போது ஏதோ அமானுஷ்யமாக நடப்பதை உணர்கிறார். ஆனால் அதை மேற்கொண்டு ஆராயாமல், பிழைப்புக்கு வழி தேட ஆரம்பிக்கிறார். பணக்கஷ்டம் அதிகரிக்கிறது. இவரது தோழி ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக வேலைப் பார்க்கிறார். இவர்கள் எடுத்த ஒரு பேய்ப் படத்தை தன்னந்தனியாகப் பார்த்தால் ரூ 5 லட்சம் பணம் கிடைக்கும் என்பதை அறிந்து, அந்தப் படத்தைப் பார்க்கப் போகிறார்.

SHARE