நமது உடல் உறுப்புகள் அதன் செயற்திறனை ஊக்குவிக்கும் வகையில் புள்ளிகள் இருக்கின்றது.
மேலும் அந்த புள்ளிகளை தூண்டிவிட்டு அதன் மூலம் தீர்வு காண்பதை அக்குபஞ்சர் மருத்துவ முறை என்கிறோம்.
அந்த வகையில் மார்பின் மைய புள்ளியில் இரண்டு நிமிடம் தேய்த்துப் பயற்சி செய்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
மாரடைப்பு வரமால் தடுக்க செய்ய வேண்டியவை
- சிலருக்கு இதயம் படபடவென்று துடிக்கும் இதயத்தில் வலி, மன அழுத்தம் போன்ற உணர்வுகள் ஏற்படலாம்.
- இது போன்ற உணர்வு அதிகமாக ஏற்படுபவர்கள் இதை போக்க மிக எளிய வழியான அக்குபஞ்சர் முறையில் நல்ல தீர்வைக் காணலாம்.
- அதற்கு மார்பின் நடுவில் இருக்கும் இந்த புள்ளியில் அக்குபஞ்சர் பயிற்சி மூலம் 2 நிமிடங்கள் வரை தேய்த்துக் கொடுக்க வேண்டும்.
- பின் அந்த 2 நிமிடங்களுமே மூச்சை நன்றாக இழுத்து, ஆழமாகவும், நிதானமாகவும் ஒரே மாதிரியாக மூச்சை விட வேண்டும்.
நன்மைகள்
- இந்த முறையை செய்தால், பதட்டம் குறையும், நரம்பு மண்டலம் வலுமையடையும், இதய கோளாறுகள் வராமல் தடுக்கப்படும்.
- இதய அழுத்தம், மன அழுத்தம் ஆகியவற்றை கட்டுக்குள் வைத்து, ஆஸ்துமா, இருமல், மார்பக தொல்லை போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வளிக்கிறது.
- இந்த பயிற்சியை நீங்கள் தினமும் கூட செய்யலாம். இதனால் ரத்த ஓட்டம் உடல் முழுவதும் சீராக சென்று மற்ற உடல் பாகங்களின் செயற்திறன் மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.