மாரப்பனவின் பதவி விலகல் ஏனையவர்களுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞை– பிரதமர்

583

சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன பதவி விலகியமை ஏனைய அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திலக் மாரப்பன என்னவொரு காரணத்திற்காக எந்தவொரு சூழ்நிலைக்காக பதவி விலகியிருந்தாலும், இந்த விடயத்தை அனைத்து அமைச்சர்களும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்வில் பாராளுமன்றில் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையிலேயே திலக் மாரப்பன தனது பதவியை ராஜினாமா செய்த் தீர்மானித்தார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணத்தில் எடுக்கப்படக் கூடிய மிகச் சிறந்த தீர்மானம் பதவியை ராஜினாமா செய்வதேயாகும் என தாம் திலக் மாரப்பனவிற்கு ஆலோசனை வழங்கியதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE