திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜி.வி. பிரகாஷ். இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் மறுபக்கம் கலக்கி வருகிறார்.
இவருடைய இசையில் கடந்த வாரம் வெளிவந்து வசூலில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி கொண்டிருக்கும் திரைப்படம் தாம் மார்க் ஆண்டனி.
மார்க் ஆண்டனி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா, சுனில், செல்வராகவன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. குறிப்பாக வசூலில் மூன்று நாட்களிலேயே ரூ. 40 கோடியை உலகளவில் கடந்துவிட்டது என தகவல் தெரிவிக்கின்றனர்.
இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்க் ஆண்டனி படத்திற்கு இசையமைக்க ரூ. 2.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.