மார்க் ஆண்டனி படம் எப்படி இருக்கு.. படம் பார்த்தவர்களின் விமர்சனம்

109

 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி.

இப்படத்தில் இவர்களுடன் இணைந்து சுனில், செல்வராகவன், ரிது வர்மா என பலரும் நடித்துள்ளனர்.

இன்று உலகளவில் திரையரங்கில் வெளிவந்துள்ள மார்க் ஆண்டனி படத்தை அதிகாலை காட்சி பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதில் மார்க் ஆண்டனி முதல் பாகம் சூப்பர். விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பு பட்டையை கிளப்புகிறது. இடைவேளை காட்சி செம.

குறிப்பாக ஜி.வி. பிரகாஷ் இசை மற்றும் ஆக்ஷன் காட்சிகள் அருமையாக இருகிறது என படத்தை பார்த்த ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

SHARE