வவுனியா மாங்குளம் பகுதியில் விஷேட தேவைக்குட்பட்டோருக்கான வதிவிட இல்லம் மற்றும் தொழிநுட்பப்பயிற்சி நிலையம் என்பன இன்று காலை 9.30மணிக்கு நிலையத்தின் இயக்குநர் சி. ஜெகதீஸ்வரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா பிரதேச செயலாளர் திரு. கா. உதயராஜா, வரரோட் நிறுவனத்தின உதவி இயக்குநர் அருட்பணி கிறிஸ்ரி ஜோன், வைத்தியர் மதிவதனன், பண்டாரிக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் சமயத்தலைவர்கள், பொதுமக்கள், விஷேட தேவைக்குட்பட்டோர், என பலரும் கலந்து கலந்து கொண்டதுடன் வதிவிட இல்லத்தினை, அதிதிகள் திறந்து வைத்தனர்.