மாளிகாவத்தையில் போதைப்பொருடன் இருவர் கைது

106

ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரிகள் இருவர் மாளிகாவத்தை பிரதேசத்தில் வைத்து வெள்ளவத்தை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 27 கிராம் 330 மில்லிகிராம்ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளனது.

நேற்று பிற்பகல் 1.35 மணியளவில் மாளிகாவத்தை சமகி மாவத்தையில் வைத்து வெள்ளவத்தை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸாரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

ஜூம்மா மஸ்ஜித் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய மொஹமட் சுமித் மொஹமட் ரிஸ்வான் என்பவரே கைதுசெய்யப்பட்டார்.

இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து 25 கிராம் 100 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நபரை மேலதிக விசாரணைகளுக்காக மாளிகாவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும் வெள்ளவத்தை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்த தகவலுக்கமைய அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டிருந்த ரோந்து பணிகளின் போது மாலை 6 மணியளவில் இன்னுமொருவர் மாளிகாவத்தை மில்டன் பெரேரா மாவத்தை சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

ஜூம்மா மஸ்ஜித் வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய மொஹமட் நளீன் மொஹமட் ரிஸ்கி என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.

இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து 2 கிராம் 230 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபரையும் மேலதிக விசாரணைகளுக்காக மாளிகாவத்தை பொலிஸில் ஒப்படைத்த நிலையில் அவரையும் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்த நிலையில் மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

SHARE