மட்டக்களப்பு வாகரை மற்றும் மாவடிமுன்மாரி ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களில் புதிதாக நேற்று நாட்டப்பட்ட நினைவுக் கற்களை குறித்த இடங்களுக்குச் சென்ற வாகரை மற்றும் கொக்கட்டிச் சோலை பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கமைய அவைகளை நேற்று திங்கட்கிழமை (26) மாலை பிடுங்கி எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்
கடந்த காலத்தில் அரசாங்கம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபிரதேசங்களை கைப்பற்றியதையடுத்து; விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் துயிலுமில்லங்களை படையினர் அழித்ததுடன் அப்பகுதில் முகாம்களை அமைத்துவந்தனர்.
இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கம் ஏற்பட்டதும் மீண்டும் மாவீரர்களின் துயிலுமில்லங்களில் அவர்களது உறவினர்கள் சென்று அங்கு அமைக்கப்பட்ட நிலையிலிருந்த சில நினைவுக் கற்களை எடுத்து நாட்டி நினைவேந்தல்களை அனுஷ்டித்து வந்தனர்.
கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் மாவீரர் நினைவேந்தல்களை மிகவும் உணர்வுப் பூர்வமாக அனுஷ்டிப்பதற்காகப் புதிதாக நினைவுக்கல்லை நாட்டினர். இதனையடுத்து பொலிஸார் எற்பாட்டுக் குழுவினரை அழைத்து சட்டத்துக்கு முரணாக அரச காணியில் பிரதேச சபையின் அனுமதியின்றி இந்த நினைவுக்கல்லை நாட்டுவதாகவும் இதனை அகற்றுமாறும் தெரிவித்தனர்.
அல்லது நீதிமன்றத்தில் வழக்குதாக்குதல் செய்யப்பட்டு தடை உத்தரவு பெறப்படும் என அறிவுறுத்தலையடுத்து வாகரையில் 100 நினைவுக் கற்களையும் மாவடிமுன்மாரியில் 20 நினைவுக் கற்கலுமாக 120 நினைவுக் கற்களை பிடுங்கி எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.