வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட கட்டையர்குளம் பிரதான வீதி, புதுக்களம் மணியர்குளம் வீதிகள் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த வீதி புனரமைப்பு பணிகளுக்காக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் மாகாண குறித்தொதுக்கப்பட்ட கொடை நிதியிலிருந்து ரூபா 3.3 மில்லியன் பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.