ஒரு துடிப்புள்ள இளைஞனை கல்வியமைச்சராக நியமித்தமைக்கு பிரதமருக்கு நன்றி கூறுவதாக அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டம் தொடர்பில் பாராளுமன்றில் இன்று இடம் பெற்ற விவாததத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மலையக பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மிக பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும். மலையகத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு கல்வியமைச்சர் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்கக வேண்டும்.
மேலும் இலங்கை பிரதமர் என்ற வகையில் துடிப்புள்ள இளைஞனை ஒரு சட்டத்தரணியை கல்வியமைச்சராக நியமித்தமைக்கு நன்றியை கூறிக்கொள்வதாக அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.