மிக சிறப்பான தருணம்: குழந்தையை முத்தமிட்ட போப்பாண்டவர்!

209

01-1451636936-pope-francis35-

போப் பிரான்சிஸ் அவர்கள் கனடிய குழந்தையை முத்தமிட்ட சிறப்பான தருணத்தை அக்குழந்தையின் பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

கனடாவின் ஒன்றாரியோவை சேர்ந்த டைலர்- ஜெசிக்கா தம்பதியினரின் நான்கு மாதக்குழந்தை ஹென்றி.

இவர்கள் vatican City – க்கு அண்மையில் பயணம் மேற்கொண்டனர், அப்போது போப்பாண்டவரின் கவனம் இவர்களது குழந்தையின் மீது படும் என்பதை கனவிலும் கூட நினைத்துப்பார்த்திருக்கமாட்டார்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, செயிண்ட் பீட்டர் சதுக்கம் இடத்தில் சுமார் 13,000 பேர் போப்பாண்டவரின் வருகைக்காக காத்திருந்தனர்.

அதில் நாங்களும் ஒருவர், எங்கள் குழந்தை போப்பாண்டவரை சந்திக்க போகிறது என விளையாட்டாக பேசிக்கொண்டோம், அப்போது காரில் வந்தபடி மக்களை பார்த்த கையசைத்த போப்பாண்டவரின் கவனம் எங்கள் குழந்தையின் மீது பட்டது,

அதிக மக்கள் கூட்டத்தில் அனைவரும் எங்களை பிடித்து தள்ளினர், அதன் பின்னர் எங்கள் குழந்தையை வாங்கிய போப்பாண்டவர் நெற்றியில் அன்போடு முத்தமிட்டார்,

இந்த சிறப்பான தருணத்தை எங்களால் மறக்க இயலாது, போப்பாண்டவர் மிகவும் அன்புள்ளம் கொண்டவர், நாங்கள் விளையாட்டாக பேசிக்கொண்டோம், ஆனால் அது உண்மையில் நடந்துவிட்டது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளனர்.

SHARE