மிதக்கவிடப்பட்டுள்ள ரூபாவின் பெறுமதி! அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

295
மத்திய வங்கியின் வழிகாட்டுதலின் பிரகாரம் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி மிதக்கவிடப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டுச் சொத்துக்களை சமப்படுத்தி கடந்த சில மாதங்களாக அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இதன் காரணமாக பாரியதொரு பொருளாதாரச் சுமை நாட்டின் மீது சுமத்தப்பட்டது.

இதனையடுத்து முன்னைய சந்திரிக்கா அரசாங்கம் செய்தது போன்று தற்போது அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி மிதக்கவிடப்பட்டுள்ளது.

தளம்பல் நிலையில் காணப்படும் ரூபாவின் பெறுமதி இன்னும் ஓரிரு நாட்களுக்குள் ஸ்திரமான பெறுமதியில் நிலைகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்குள் அமெரிக்க டொலரின் பெறுமதி சுமார் 13 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் ஏற்பட்டுள்ளதாக இறக்குமதி வர்த்தகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

SHARE