மிதிவெடித் தாக்குதலில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

228

மணிப்பூர் சாலையில் தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த மிதிவெடியில் சிக்கி இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) அதிகாலையில் டெங்நவுபால் மாவட்டத்தில் 165-வது பிரதேச இராணுவ பிரிவை சேர்ந்த வீரர்கள் ரோந்து பணிக்காக இராணுவ வாகனங்களில் அணிவகுத்து சென்றுகொண்டிருந்தனர்.

இதன்போது லோக்சாவ் என்ற கிராமத்தின் சாலையை கடக்க முற்பட்ட வேளையில் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 4 இராணுவ வீரர்கள் பேர் பலத்த காயம் அடைந்ததோடு, அவர்கள் ஹெலிகப்டர் மூலம் அருகில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களில் 2 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிந்துள்ளனர்.

மேலும் குறித்த மிதிவெடித் தாக்குதலை தொடர்ந்து குறித்த பகுதிகளில் தீவிரவாதிகளை தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

SHARE