மின்கம்பம் வீழ்ந்தால் அச்சத்தில் குடியிருப்பாளர்கள்

268

 

நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் மாதிரி  கிராம குடியிருப்பிற்கு மின்சாரம் வழங்கும் மின்கம்பம் நீண்ட நாட்களாக உடைந்து வீழ்ந்த கிடப்பதால் அணர்த்தங்கள் ஏற்படலாமென  குடியிருப்பாளர் அச்சம் தெரிவிக்கின்றனர்

4f0f0978-a271-4a58-b5ed-39c5098d014a f95cea1b-dc98-4a6e-9e6e-9d4a5fe6d778

தொடர் மழை காலநிலையினால் மரத்தினாலான மேற்படி மின் கம்பம் இரண்டாக உடைந்து வீட்டு வாசலில் வீழ்ந்து கிடப்பதாகவும் மின் இணைப்புடன் கானப்படும் இந் நிலையில் பாரீய ஆபத்துக்களை சந்திக்க நேரிடலாம் என தெரிவிக்கின்றனர்
கடந்த ஓருவார காலமாக வீழ்ந்துகிடக்கும்மிற்கம்பத்தை நிருத்தியமைக்குமாறு நோட்டன் மின்சாரசபைக்கு அறிவித்துள்ள போதும் இதுவரையில் மாற்று நடவடிக்கை எடுக்காமல் அசமந்த போக்கை கடைபிடிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்
மேலும் ஒஸ்போன் தமிழ் வித்தியாலயத்திற்கு மிக அருகிலே இக் குடியிருப்புகள் காணப்படுவதுடன் மின்சார துன்டிப்பும்    ஏற்பட்டுள்ள நிலையில் அச்சம் காரணமாக உறவினர்கள் வீட்டில் தங்கிகியிருப்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்

பாதிப்புள்ளான நிலையில் ஆபத்துக்கள் ஏற்படுத்தும் வகையில் காணப்படும் மின் கம்பத்தை திருத்தியமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்

 நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

SHARE