மின்சாரத் தடைக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்!- நாமல் ராஜபக்ச

268

மின்சாரத் தடைக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

namal-rajapaksha

டுவிட்டர் கணக்கில் நாமல் ராஜபக்ச இது பற்றி பதிவொன்றை இட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டதில்லை. கடந்த அரசாங்கத்தை குறைகூறி குறைகூறி இந்தப் பிரச்சினைகள் அனைத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ள முடியாது.

அரசாங்கத்தின் திறமையற்ற மற்றும் மோசமான நிர்வாகத்தினால் இவ்வாறு மின்சாரத் தடை ஏற்படுகின்றது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மின்சார தடை பற்றி நாமலும் கருத்து

அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் முறைகேடான நிர்வாகம் காரணமாகவே நாட்டில் மின்சார தடையேற்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச தனது டுவிட்டரில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் இவ்வாறு எப்போதும் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. முன்னைய அரசாங்கத்தை திட்டுவதன் மூலம் அரசாங்கம் இந்த விடயத்தில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

SHARE