மின்னல் தாக்கி உடல் கருகி பலியான பெண்

170

சுவிட்சர்லாந்து நாட்டில் பெய்த கனமழையை தொடர்ந்து பெண் ஒருவர் மின்னல் தாக்கி உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த 41 வயதான பெண் ஒருவர் தனது 40 வயதான நண்பர் ஒருவருடன் சுவிஸிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் Matterhorn மலைப்பகுதியில் நண்பருடன் பெண் மலையேற்றத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக காலநிலை மாறியதை தொடர்ந்து கனமழையும் சூறாவளி காற்றும் வீசியுள்ளது.

மலையேற்றத்தில் ஈடுப்பட்ட இருவரும் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைய முயற்சித்தபோது பலமாக மின்னல் அடித்துள்ளது.

இச்சம்பவத்தில் நேரடியாக மின்னல் தாக்கியதில் பெண் உடல் கருகி கீழே விழுந்துள்ளார்.

கண் முன்னால் நிகழ்ந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர் உடனடியாக மீட்புக் குழுவினருக்கு தகவல் அளித்துள்ளார்.

துரதிஷ்டவசமாக, காலநிலை மோசமாக இருந்ததால் 6 மணி நேரத்திற்கு பின்னர் மீட்புக் குழுவினர் ஹெலிகொப்டரில் வந்துள்ளனர்.

ஆனால், மீட்புக் குழுவினர் வருவதற்குள் மின்னலால் தாக்கப்பட்ட பெண் ஏற்கனவே உயிரிழந்துள்ளார்.

சடலத்தை மீட்ட மீட்புக் குழுவினர், அதிர்ச்சியில் உறைந்திருந்த நண்பரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

SHARE