அம்பாறை – மங்களகம – மஹியங்கன பிரதேசத்தில் மின்னல் தாக்கி உறவினர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று மாலை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது இவ்வாறு மின்னல் தாக்கி பலியானதாக போலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் குறித்த பிரதேசத்தை சேர்ந்த 46 மற்றும் 20 வயதுடைய உறவினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மஹியங்கன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.