தெஹியோவிட்ட-கனங்கம-பொலிபராவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி 12 வயது சிறுமிஒருவர் பலியாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
தெஹியோவிட்ட தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு பலியாகியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சகோதரனுடன் வீட்டில் இருந்த போதே சிறுமி மின்னல் தாக்கத்திற்குஉள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புளத்கோப்பிட்டிய-உந்துகொட பிரதேசத்தில் மின்னல் தாக்கித்திற்குஉள்ளாகி 34 வயதான நபர் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தனது வீட்டில் இருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம்இடம்பெற்றுள்ளதாக புளத்கோப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.