மின்னல் வேக கோல். மிரண்டு நின்ற எதிரணி வீரர்கள்

147

625-500-560-350-160-300-053-800-748-160-70-13

உலகக் கிண்ணம் கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் பெண்டகீ மின்னல் வேக கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கும் உலகக்கிண்ணம் தகுதிச் சுற்றுக்கான கால்பந்து போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதில் எந்த ஒரு பெரிய அணியாக இருந்தாலும் தகுதிச் சுற்று போட்டியில் விளையாடிய பின்னரே உலகக் கிண்ணம் கால்பந்து போட்டியில் விளையாட முடியும்.

அது போல இப்போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் உலகின் 2 ஆம் நிலையில் உள்ள பெல்ஜியம் அணியும், 205 ஆம் இடத்தில் உள்ள கத்துக்குட்டி அணியான ஜிப்ரால்டர் அணிகளும் மோதின.

இப்போட்டியில் நடுவர் வீசிலை ஊதியது தான் , பெல்ஜியம் அணி வீரர்கள் பந்தை எதிரணி வீரர்களுக்கு தரவே இல்லை.

இதில் அதிசயம் என்னவென்றால் ஆட்டம் தொடங்கிய 8.1 விநாடிகளிலே பெல்ஜியம் வீரர் பெண்டகீ கோல் கீப்பரை ஏமாற்றி அற்புதமாக கோல் அடித்து சர்வதேச அளவில் அதிவேக கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இப்போட்டியில் பெல்ஜியம் அணி 6-0 என்ற கணக்கில் ஜிப்ரால்டர் அணியை எளிதில் வென்றது. இதில் பெண்டகீ ஹாட்ரிக் கோல் அடிக்க விட்சல், மெர்டன்ஸ், கேப்டன் ஹசார்ட் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.

இதற்கு முன்னர் ஜெர்மனி வீரர் லுகாஸ் பொடோல்ஸ்கி 6 நொடிகளிலே அதிவேக கோல் அடித்து அசத்தினார். ஆனால் அப்போட்டி நட்பு ரீதியான போட்டி என்பதால் அது FIFA அமைப்பின் அதிகாரப் பூர்வ போட்டியாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

மேலும் கடந்த ஆகஸ்டு மாதம், பிரீமியர் லீக் அணியான கிறிஸ்டல் பேலஸ் அணியால் 32 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கப்பட்ட பெண்டகீ அதில் சிறப்பாக செயல்பட்டதால், தற்போது தேசிய அணியில் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பினை பென்டகீ சரித்திரமாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE