சுவிட்சர்லாந்து நாட்டில் குடும்பம் ஒன்றிற்கு ரூ.3 கோடிக்கும் அதிகமாக மின் கட்டணத்திற்கான ரசீது அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸில் உள்ள Neuchatel மாகாணத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்நகரில் வசித்து வந்த குடும்பத்திற்கு மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ரசீது வந்துள்ளது.
ரசீதை வாங்கி படித்து பார்த்த கணவர் அதில் குறிப்பிட்டிருந்த தொகையை கண்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார்.
கணவனை நிலையைக் கண்டு விரைந்து வந்த மனைவி ரசீதை வாங்கி பார்த்துள்ளார்.
அதில், ‘மின் கட்டணமாக 237,590 பிராங்க்(3,56,31,451 இலங்கை ரூபாய்) செலுத்த வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு மனைவியும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக இது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி மின்சார நிலையத்திற்கு தகவலை கணவர் அனுப்பியுள்ளார்.
ஆனால், தகவல் எதுவும் வராத காரணத்தினால் இருவரும் நேரடியாக சென்று விசாரணை செய்துள்ளனர்.
அப்போது, அவர்கள் உண்மையாக செலுத்த வேண்டிய தொகை 11 பிராங்க் எனவும், மின்சார அளவீட்டு சாதனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இத்தொகை தவறுதலாக வந்துள்ளது என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்த அதிகாரிகள் தம்பதியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.