மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

140

கலேவெல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்பகஹகமுவல -மொரகொல்ல  வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியமையினாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் 44 வயதுடைய பம்பரகஷ்வாவ பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கலேவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE