மின் மாற்றியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்!

172

வவுனியாவில் தனியார் பாடசாலை ஒன்றின் வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் மின்மாற்றியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள தனியார் ஆங்கில பாடசாலை வாயில் முன்பாக அமைந்துள்ள மின்மாற்றியை அகற்ற மின்சாரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து அப் பாடசாலையின் அதிபர் திருமதி. நகுலேஸ்வரன் கீதாஞ்சலி தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து பாடசாலை அதிபர் கருத்து தெரிவிக்கையில்,

மின்மாற்றியை அகற்றுவதற்கு மின்சாரசபை பணம் கேட்பதாகவும் மழை காலம் என்பதால் மாணவர்களுக்கு குறித்த மின்மாற்றி அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்வார்ப்பாட்டத்தில் தனியார் பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

 

 

 

 

 

SHARE