மியன்மார் இராணுவ தலைமை மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

244

மியன்மாரின் ரக்கைன் மாநில நிலவரம் பற்றி அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கருத்துரைத்துள்ளார். அங்குள்ள சிறுபான்மை ரொஹிங்கிய முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களுக்கு மியன்மாரின் இராணுவத் தலைமைத்துவமே காரணம் என்று அமெரிக்கா கூறுகிறது. மியன்மாரின் இராணுவத் தலைவர்கள் மீது தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் பரிசீலனை செய்து வருகின்றன. இருப்பினும், அது பற்றி டில்லர்சன் ஏதும் கூறவில்லை.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து, அரை மில்லியனுக்கும் அதிகமான ரொஹிங்கிய முஸ்லிம் மக்கள் மியன்மாரில் இருந்து அண்டை நாடான பங்களாதேஷுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், ரக்கைன் மாநிலத்தில் நிலவும் நெருக்கடிநிலைக்கு, இனப் படுகொலை காரணமாக இருக்கலாமா என்பது குறித்து உலக நிறுவனம் ஆராய்ந்து வருவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான மனித உரிமை ஆணையம் கூறியது.

SHARE