இந்திய அணியில் தவான் மற்றும் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மற்ற இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
துபாயில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பைத் தொடரில் ரோகித் தலைமையிலான இந்திய அணி பட்டையை கிளப்பி வருகிறது.
தற்போது இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டாலும் ஆப்கானிஸ்தான அணியுடன் இன்னும் ஒரு போட்டி இருக்கிறது.
அந்த போட்டியில் இந்திய அணி தோற்றாலும், கவலையில்லை என்பதால் இந்திய அணியின் முன்னாள் வீரர் மஞ்ரேக்க தவான் மற்றும் ஜஸ்புரிட் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, அவர்களை இறுதிப் போட்டிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், தவான் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவரை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வு அளித்துவிடலாம், ஏனெனில் மற்றொரு வீரரான ராகுலுக்கு இடம் கொடுக்கலாம்.
அப்படி அவருக்கு வாய்ப்பு கொடுத்தால், அவரின் ஆட்டமும் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம், நன்றாக விளையாடினால் அடுத்து வரும் போட்டிகளுக்கு இது உதவியாக இருக்கும்.
அதே போன்று பந்து வீச்சாளர் பும்ராவிற்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வு கொடுத்துவிடலாம், அவருக்கு பதிலாக கலீல் அகமதுக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். இவர் ஹாங்காங் அணிக்கு எதிரான தன்னுடைய முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
மேலும் ஆப்கானிஸ்தான் அணியை குறை சொல்லிவிட முடியாது, அந்தணி இந்த தொடரில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நூலிழையில் மட்டுமே வெற்றி வாய்ப்புகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.