மிரட்டும் எலிகளை விரட்ட 1.5 மில்லியன் யூரோக்கள்

132

பிரான்ஸின் தலைநகர் பாரிஸை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் முன்னரை விட தற்போது தூய்மையடைந்துள்ளது. ஆனாலும் 100 வீத தூய்மையை இன்னும் எட்டவில்லை என பாரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போது இந்த தகவலை வெளியிட்டார்.

பாரிஸ் நகரை மேலும் சுத்தப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக 100 துப்பரவு செய்யும் தொழிலாளர்களை இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

பாரிஸ் நகரை மேலும் தூய்மையாக்க பல ஏற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் முதல்கட்டமாக துப்பரவு பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் 100 பணியாளர்களை இணைப்படுத்துடன், வருட இறுதிக்குள் அந்த எண்ணிக்கை 7000 ஐ தாண்டும்.

பாரிஸ் முழுவதும் உள்ள பூங்காங்களில் எலி போன்ற சிறிய பிராணிகள் மிக தொல்லை அதிகரித்துள்ளது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக 1.5 மில்லியன் யூரோக்கள் செலவிடப்படவுள்ளது.

உணவகங்கள், விடுகள் மேலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். துப்பரவுத் தொழிலாளர்களால் வருடத்துக்கு 150 தொன் சிகரெட் துண்டுகள் அள்ளப்படுகின்றன எனவும் ஆன் இதால்கோ மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE