ஜின் என்றுதான் முதலில் பெயர் வைத்திருந்தனர். இஸ்லாம் மதத்தில் ஜின் என்றால் தீய ஆவியை குறிக்கும். ஆனால், இந்த ஜின்னைவிட டாஸ்மாக் ஜின்தான் தமிழகத்தில் பிரபலம். அதனால், ஜின் என்றதும், என்ன டாஸ்மாக் சரக்கின் பெயரை வைத்திருக்கிறீர்கள் என இயக்குனர் சதீஷ் சந்திரசேகரை கேட்க, படத்தின் பெயரை, டார்லிங் 2 என மாற்றியுள்ளனர்.
ஐந்து நண்பர்கள் புத்தாண்டை கொண்டாட ரிசார்ட்டுக்கு வருகிறார்கள். அந்த ஐந்து பேரில் ஒருவர் பேய். அவர் பேய் என்பது அவருக்கே தெரியாது. வந்த இடத்தில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க, 5 பேரில் யாரை பேய் பிடித்திருக்கிறது என்று கண்டறிவதுதான் ஜின் சாரி, டார்லிங் 2 படத்தின் கதை.
ரமீஷ், முனீஸ்காந்த், காளி வெங்கட், அர்ஜுன் மற்றும் கலையரசன் இதில் நடித்துள்ளனர். ப்ரீத்தி நாயகி.
டார்லிங் ஞானவேல்ராஜா தயாரித்த படத்தின் பெயர். அவர் எப்படி டார்லிங் 2 என பெயர் வைக்க சம்மதித்தார்? இந்தப் படத்தை வாங்கி வெளியிடுவதே ஞானவேல்ராஜாதான். அவர்தான் ஜின்னுக்குப் பதில் டார்லிங் 2 பெயரை பரிந்துரைத்திருக்கிறார்.
விரைவில் படம் திரைக்கு வருகிறது.