மிஷ்கினுடன் இணையும் பி.சி. ஸ்ரீராம்

330

பிசாசு படத்திற்கு பிறகு மிஷ்கின் சரத்குமாரை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருப்பதாக நாம் ஏற்கெனவே அறிவித்திருந்தோம்.

தற்போது இந்த படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. மிஷ்கின் படங்களான சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு ஆகிய படங்களில் ஒளிப்பதிவு அதிகம் பேசப்பட்டது.

தற்போது ஒளிப்பதிவாளர்களில் சிறந்தவரான பி.சி.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருப்பது, ரசிகர்கள் மட்டுமில்லாது திரையுலகத்தினர் அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE