மிஸ்டர் சந்திரமௌலி செட்க்கு திடிர் விசிட் அடித்து சந்தோசப்படுத்திய பிரபல நடிகர்

170

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் திரு இயக்கும் படம் ‘மிஸ்டர்.சந்திரமௌலி’. கார்த்திக்கும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மிக வேகமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் ‘மிஸ்டர்.சந்திரமௌலி’ வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு தயாரிப்பாளர் சங்க தலைவரும் தென்னிந்தியா நடிகர் சங்கத்தின் செயலாளருமான விஷால் படக்குழுவினரை சந்தித்து, அவர்களது வேகமான மற்றும் சிறந்த பணியை பாராட்டியுள்ளார்.

திட்டமிட்டபடி படப்பிடிப்பை சிறப்பாக நடத்துவதும், ரிலீஸ் தேதியை தற்பொழுதே ஏப்ரல் 27 என அறிவித்திருப்பதும் இயக்குனர் திரு மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களது அருமையான திட்டமிடுதலுக்கு சான்றாகும் என விஷால் கூறியுள்ளார்.

SHARE