கடந்த வருடம் வந்த பல பிரச்சனைகளில் சினிமா பிரபலங்களை மிகவும் பதற்றப்பட வைத்த ஒரு விஷயம் சுசி லீக்ஸ்.
பிரபல பாடகி சுசீத்ரா அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து சினிமா பிரபலங்களின் மோசமான புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இதனால் தமிழ் திரையுலகில் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது.
பின் அந்த டுவிட்டர் பக்கம் சில விஷமிகளால் ஹாக் செய்யப்பட்டிருக்கிறது என்று சுசீத்ரா கூறியிருந்தார். தற்போது சுசிலீக்ஸ் என்ற பெயரில் ஒரு டுவிட்டர் பக்கம் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது.
அடுத்த லீலை விரைவில் வருகிறது என்று அந்த பக்கத்தில் இருந்து டுவிட் வந்துள்ளது, இதனால் பிரபலங்களிடையே மிகுந்த கலக்கம் ஏற்பட்டுள்ளது.