கமல் நடிப்பில் தவெளிவந்த ‘பம்மல் கே.சம்பந்தம்’ படத்தை இயக்கியவர் இயக்குனர் மௌலி. இவர் கமல் தயாரிப்பில் வெளிவந்த ‘நளதமயந்தி’ படத்தையும் தயாரித்திருந்தார். இக்கூட்டணி தற்போது மீண்டும் இணையவிருக்கிறது.
சமீபத்தில் இயக்குனர் மௌலி, கமலை சந்தித்து புதிய படத்திற்கான கதை பற்றி விவாதித்தாக கூறப்படுகிறது. மௌலி கூறிய கதை பிடித்துப்போனதால், கமல் அவருடைய இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும். கமல் நடித்த ‘பம்மல் கே.சம்பந்தம்’ படத்தைப் போன்று இப்படமும் முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கமல் தற்போது ‘தூங்கவனம்’ படத்தின் டப்பிங் பணிகளில் பிசியாக இருக்கிறார். இதுதவிர, இந்தியில் சயீப் அலிகானுடன் சேர்ந்து நடிக்கவிருக்கும் ‘அமர் ஹை’ என்ற படமும் இவரது கைவசம் உள்ளது. இவ்விரு படங்களையும் முடித்துவிட்டு, மௌலியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.